Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (23-03-2022) ராசி பலன்கள்

0

இன்றைய (23-03-2022) ராசி பலன்கள்

மேஷம்
மார்ச் 23, 2022

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

அஸ்வினி : கனிவு வேண்டும்.

பரணி : விரயங்கள் ஏற்படும்.

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
—————————————

 

ரிஷபம்
மார்ச் 23, 2022

வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
—————————————

 

மிதுனம்
மார்ச் 23, 2022

மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில காரியங்கள் நிறைவுபெறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் : மந்தமான நாள்.
—————————————

 

கடகம்
மார்ச் 23, 2022

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.

பூசம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
—————————————

 

சிம்மம்
மார்ச் 23, 2022

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவியின் மூலம் இழுபறியான வேலைகள் நிறைவடையும். உத்தியோகம் சார்ந்த வெளிவட்டார நட்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். சொத்து தொடர்பான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மகம் : உதவி கிடைக்கும்.

பூரம் : நட்பு விரிவடையும்.

உத்திரம் : சாதகமான நாள்.
—————————————

 

கன்னி
மார்ச் 23, 2022

மனதில் தன்னம்பிக்கை மேம்படும். புதிய தொழில்நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குழப்பமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

உத்திரம் : தன்னம்பிக்கையான நாள்.

அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

 

துலாம்
மார்ச் 23, 2022

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சார்ந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

 

சித்திரை : மேன்மை உண்டாகும்.

சுவாதி : வெற்றி கிடைக்கும்.

விசாகம் : அனுபவம் ஏற்படும்.
—————————————

 

விருச்சிகம்
மார்ச் 23, 2022

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உழைப்பு வெளிப்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

விசாகம் : அனுசரித்து செல்லவும்.

அனுஷம் : விழிப்புணர்வு வேண்டும்.

கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
—————————————

 

தனுசு
மார்ச் 23, 2022

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்களின் சூட்சுமங்களை அறிந்து வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

மூலம் : புரிதல் உண்டாகும்.

பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.

உத்திராடம் : உதவி கிடைக்கும்.
—————————————

 

மகரம்
மார்ச் 23, 2022

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆலோசனை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

திருவோணம் : மரியாதை மேம்படும்.

அவிட்டம் : தடைகள் குறையும்.
—————————————

 

கும்பம்
மார்ச் 23, 2022

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சோர்வான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

சதயம் : முதலீடுகள் மேம்படும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
—————————————

 

மீனம்
மார்ச் 23, 2022

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு உண்டாகும். விரயங்கள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

ரேவதி : தெளிவு உண்டாகும்.
—————————————

Leave A Reply

Your email address will not be published.