Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் அமையபெற்ற ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் கடந்த 1998ல் அமையபெற்ற ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்  கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.

Ad banner

திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவின் முதல் நாளான நேற்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து

கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை  விநாயகர் வழிபாடு, மிருத்சங்கிரஹணம், பூமிபூஜை, ரக்க்ஷா பந்தனம்,

கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசால பூஜைகள், 108 திரவ்ய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.

இன்று ஞாயிறன்று காலை  கோ பூஜை, பிம்ப சுத்தி, சுவாமிக்கு ரக்க்ஷாபந்தனம், நாடி சந்தானம், யாக சாலை பூஜை, 108 திரவ்ய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாரதனை, நடந்தது.

காலை 7.30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு, காலை 8.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை

நிர்வாக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி பொறுப்பாளர்கள் ஜெம்புலிங்கம், முத்துசாமி

மற்றும் கந்தன் நகர்வாசிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.