திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பு சார்பில் மன்னார்புரம் பகுதியில் உள்ள வீடுகளில் மரகன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் மாணவ மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் தலைமை தாங்கி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் தண்ணீர் வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் வீடுகளில் தெருக்களில் பள்ளிகளில் உள்ள பயன்படாத இடங்களில் மரகன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்வின் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் கார்த்திகா உடற்கல்வி ஆசிரியரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான T. சுரேஷ்பாபு அழகு கலை நிபுணர் சித்ராமூர்த்தி மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மங்கையர்கரசி உலக சாதனையாளர் தர்னிகா, கிஷோர் குமார், வசந்த் ஹரி, கிருபலட்சுமி, பர்வேஸ் தர்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில் மண்ணார்புரம் பகுதியில் உள்ள வீடுகளில் பழ வகையிலான கொய்யா மாதுளை நெல்லி உள்ளிட்ட மரகன்றுகள் நடப்பட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பழ வகையிலான மரகன்றுகளும் வழங்கப்பட்டது