Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட திருநங்கை உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்

0

'- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்தான். :-

 

Ad banner

1.திருச்சியில்

பயங்கர ஆயுதங்களுடன்

வாலிபருக்கு கொலை மிரட்டல்

 

2 ரவுடிகள் கைது – 5 பேர் தப்பி ஓட்டம்.

 

திருச்சியில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாலிபரை கொலை செய்ய முயற்சித்த இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்

 

திருச்சி தாராநல்லூர் ஈபி சாலையை சேர்ந்தவர் முனீஸ்வரன் ( வயது 25 ). இவரது சகோதரர் செல்வம். செல்வத்திற்கும் வடக்கு தாராநல்லூர் பகுதியில் சேர்ந்த மணிகண்டன் (27) என்ற சரித்திர பதிவேடு ரவுடிக்கும் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் கடந்த 25-ந தேதி ரவுடி மணிகண்டன் தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த சந்துரு (26) கீர்த்திவாசன் (26) வீரமணி (25) பரத் ( 25 ) பாலாஜி ( 26 ) வினோத் (27 )ஆகியோருடன் சேர்ந்து

செல்வத்தின் வீட்டை வைத்து முனீஸ்வரனை பயங்கர ஆயுதங்களை கொண்டு முனீஸ்வரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன் மற்றும் சந்துரு ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுடன் இருந்த மற்ற 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து ஒரு பட்டாகத்தி மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது

 

2.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில்

அரசு மருத்துவக் கல்லூரி

மாணவியிடம் பணம் பறிக்க முயற்சி

 

திருநங்கைக்கு போலீஸ் வலைவீச்சு

 

TVK ad

திருச்சியில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர்

 

திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் தெருவை சேர்ந்தவர் நூர்முகமது.இவரது மகள் ரஹீமா ( வயது 20 ).இவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அவர் துறையூர் செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் துறையூர் மார்க்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார் அங்கு வந்த சில திருநங்கைகள் அவரிடம் தகராறு செய்தனர் அதில் ஒருவர் மாணவி ரஹிமாவிடம் பணம் கேட்டு மிரட்டினார் ரஹீமா பணம் கொடுக்க மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி அவதூறாக நடந்து கொண்டனர். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட அந்த திருநங்கையை தேடி வருகின்றனர்.

 

3.

திருச்சியில்

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

 

போலீஸார் விசாரணை

 

திருச்சி ஏர்போர்ட் புதுக்கோட்டை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சியாம் (வயது 25) பெயிண்டர் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் தேதி வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார் இதை அவரது தந்தை முத்துக்குமாருக்கு தெரிய வந்தது இதனால் மன உளைச்சலில் மாடிக்கு சென்ற சியாம் வெகு நேரமாக கீழே வரவில்லை இதனால் அவரது பாட்டி சியாம் அறைக்கு சென்று பார்த்தார் அப்போது ஷியாம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

4.

திருச்சி மாநகரில்

புகையிலை, போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

 

போலீசார் நடவடிக்கை .

திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே புகையிலை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் அல்லித்துரையைச் சேர்ந்த ராமன் (வயது 28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலை கல் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்மலை ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு கூடிய புகையிலை பொருட்கள் விற்ற திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த பவித்ரன் (வயது 27 )என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உறையூர் பாண்டமங்கலம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற உறையூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த ஜஸ்டின் தேவராஜ் (வயது 19) என்ற வாலிபரை உறையூர் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்று பேரையும் மாநகரப் போலீசார் ஜாமினில் விடுவித்தனர். இதேபோன்று பாலக்கரை இருதயபுரம் அருகே போதை மாத்திரையில் விற்பனை செய்த பாலக்கரை சூரஞ்சேரியை சேர்ந்த

யோகநாதன் (வயது27) என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 9 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.