Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நீரில் மூழ்கி உள்ள 800 ஏக்கர் நெல், வாழைக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க விவசாயி அயிலை சிவசூரியன் கோரிக்கை.

திருச்சியில் நீரில் மூழ்கி உள்ள 800 ஏக்கர் நெல், வாழைக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க விவசாயி அயிலை சிவசூரியன் கோரிக்கை.

0

திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதில் திருவெறும்பூர் வட்டாரத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல் அந்தநல்லூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த மாதம் நடவு செய்த நெல் பயிர்களும் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் இந்த நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி விவசாய சங்க நிர்வாகி அயிலை சிவசூரியன் கூறுகையில்,

பல இடங்களில்
நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் வெள்ள நீர் அனைத்தும் வயல்வெளிகளுக்குள் புகுந்துவிட்டது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

மேலும் நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.