Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று அய்யாகண்ணு தலைமையில் மோடிக்கு எருமமாடு முலம் மனு அனுப்பும் போராட்டம்.நாளை பால்டாயில் அருந்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று அய்யாகண்ணு தலைமையில் மோடிக்கு எருமமாடு முலம் மனு அனுப்பும் போராட்டம்.நாளை பால்டாயில் அருந்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

0

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் எருமை மாடுக்கு மனு கொடுத்தல் நூதன உண்ணாவிரதம் போராட்டம் (09.11.2021 இன்று 29ம் நாள்)

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு

தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து

09.11.2021 செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு 29ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு மோடி ஐயா தராததால், கோரிக்கைகள் அடங்கிய மனுவை எருமை மாட்டுக்கு கொடுத்து அந்த எருமை மாட்டை தலைநகரம் டெல்லிக்கு அனுப்பு வைத்து மனுவை டெல்லியில் சேர்க்க கோரி நூதன உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார்.

இந்த போராட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் மேகராஜன், தட்சிணாமூர்த்தி, பரமசிவம் மாநிலச் செயலாளர் ஜான்மில்கியராஜ், தியாகு மற்றும்

பெரியசாமி,சுப்பையா, மண்டையோடு ராஜேந்திரன், சிந்தாமணி செல்வம், தெய்வானை, குணசேகர், கண்ணுசாமி, கிருஷ்ணமூர்த்தி, மாயவன், ராஜேந்திரன்,கவியரசு,ராஜா, நீலகண்டன்,தங்கராசு,ஜெகதீசன், சுரேஷ்குமார் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார்,பிரகாஷ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் 30வது நாளான நாளை விவசாயிகள் பால்டாயில் அருந்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.