மழை நீர் வாய்க்கால்கள் இதுவரை 10.083 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை துவங்கும் முன் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் .
அதன்படி நான்கு கோட்ட பகுதிகளில் மனித ஆற்றல் முலம் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 10,083 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டது.
கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 30 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 2870 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோட்டத்தில்11 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 755 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டது.
பொன்மலை கோட்டத்தில்16 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 3920 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டது.
அரியமங்கலம் கோட்டத்தில் 23 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 2538 மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டது.
இப்பணி உதவி ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தெருக்கள் வாரியாக தூர்வாரும் பணி திட்டமிடப்பட்டு தினசரி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இப்பணிகளை உதவி ஆணையர்கள் தினசரி ஆய்வு செய்து வருகிறார்கள்.
இப்பணியினை மழை காலம் துவங்குவதற்கு முன் முடிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், தெரிவித்தார்.