Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.

0

மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா

எழுத்தாளர், சிந்தனையாளருமான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தியால் (1988) நிறுவப்பட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 34-வது ஆண்டு தொடக்க நாள் நேற்று மாலை 6.00 to 8.30 மணி வரை இணைய வழிக் கூட்டம் மாநிலத் தலைவர் மருத்துவர் த இராசலிங்கம் தலைமையில் நடைப்பெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் தஞ்சை. முனைவர் எல்.பாஸ்கர் வரவேற்புரையாற்றினார்.

மாநிலத்தலைவர் மருத்துவர் த.இராசலிங்கம் உரையில்: கடந்த காலத்தில் இயக்கம் ஆற்றியுள்ள சமுதாயப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்டங்களில் இயக்கம் செய்து வரும் சமுதாயப் பணிகள் குறித்து பேசினார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. கோவிட் பெருந்தொற்று காலத்தில் அரசு முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது.

2. கொரானா தடுப்பூசி போடும் பணிக்கு மக்கள் சக்தி இயக்கம் உறுதுணையாக நின்று, வாய்ப்புள்ள மாவட்டங்களில் அரசுடன் இணைந்து செயல்படுவது.

3. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

4. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்களை சந்தித்து பொது நல கோரிக்கை வலியுறுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் கோவை பாஸ்கர்,

மாநில ஆலோசகர்கள் திருச்சி கே.சி. நீலமேகம்,

தஞ்சை முனைவர் ஜெயபிரகாஷ் , கவிஞர் கலியுகன் கோபி, மாநிலத் துணைத் தலைவர்கள் பெரம்பலூர் முனைவர் க.பெரியசாமி, வழக்கறிஞர் மதுரை அசோகன், மாநில துணை செயலாளர்கள் கரூர் சுகுமார், திருச்சி – வெ.இரா. சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் திருச்சி இரா.இளங்கோ, பெரம்பலூர் சிவக்குமார், தஞ்சை பேராசிரியர் முருகானந்தம், புதுக்கோட்டை முனைவர் கணேசன் , மதுரை சேகர், கரூர் விசுவநாதன், தூத்துக்குடி கந்தசாமி, மகளிரணி திருச்சி . தரணி, முனைவர் அனுஷ்யாதேவி, பேராசிரியர் ரம்யா வேணி, பேராசிரியர் தென்றல் பாண்டியன் உட்பட 65 மேற்பட்ட நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

முடிவில் தஞ்சை பேராசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.