திருச்சி கிழக்கு தொகுதியில் மண்ணை கவ்வும் இனிகோ இருதயராஜ்.
சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் இனிகோ இருதயராஜ் இவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்..
இந்த அமைப்பின் பெயரை கூறி திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலினிடம் நெருக்கடி கொடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 நாட்களாக திருச்சியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
மற்ற மதத்தினர் இவர் மீது வெறுப்பில் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் இவர் திருச்சி மாவட்டத்தில் இருக்க மாட்டார் என்பதால் ( ஏற்கனவே திருச்சி எம்பி திருநாவுக்கரசு யாரும் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
யாரும் இவருக்கு வாக்களிக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் சார்பில் லூயிஸ் அவர்கள் போட்டியிட்டால் நாங்கள் அவருக்காக வேலை செய்வோம், ஜோசப் லூயிஸ் இல்லாமல் யார் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக தான் செயல்படும் என காங் கூறி வருகின்றனர்.
இதேபோன்று திமுக சார்பில் மகேஷ் பொய்யாமொழி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு சீட் கிடைக்காததால் திமுகவினரும் அவருக்கு எதிராக தான் செயல்பட உள்ளனர்.
முன்னாள் தலைமை கொறடா மனோகரன் அவர்களும் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதால் திமுகவின் ஓட்டுகளை பிரிப்பார் என்பது உறுதி.
இதனால் சுற்றுலா துறை அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்ல மண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவார் என்பது அனைத்து தரப்பு பொதுமக்களின் கருத்தாகும்.