மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி தேர்தல் பிரசாரம் தொடக்கம்.
திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
காலை 7 மணி முதல் மாதவப்பெருமாள் கோயில், பாச்சூர், திருவாசி துடையூர் , மேல் பத்து, கிளிய நல்லூர், சிறுகாம்பூர், திருப்பஞ்சலி, அழகியமணவாளம், தீராம் பாளையம், திருவெள்ளறை, திருபத்தூர், சிறுகுடி, கீழப்பட்டி,, ஓமாந்தூர், தளுதாளப்பட்டி, தத்தமங்கலம், சா. அய்யம்பாளையம், பூனாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இரவு 9 மணி வரை தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேட்பாளருடன் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மட்டும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.