Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூரில் என்ன செய்தார் மகேஷ்? ப.குமார் அதிரடி பேச்சு

0

 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ப.குமார் திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயிலிலிருந்து தன்னுடைய வெற்றி பிரச்சாரத்தை தொடங்கினார்கள்,

பிரச்சாரத்தை தொடங்கி பொதுமக்களிடையே ப.குமார் பேசும்போது :

வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் சற்று யோசித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும், 2011 முன்பு அதை யார் ஆண்டது அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது, பொது மக்கள் பிரச்சினையை அவர்கள் தீர்த்தார்களா? விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டு, எல்லாத்துறையிலும் பின்னடைவு இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.

2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின்பு எல்லா துறையிலும் வளர்ச்சி, பல நலத்திட்டங்கள் என தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டது. உதாரணமாக மின்சார குறைகள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றி உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

அதே போல் அவர்களின் கனவுத் திட்டமாக இருந்த மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்கி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி மின்சார துறையில் மட்டும் பல்வேறு புரட்சிகளை செய்த ஜெயலலிதா அவர்கள் மற்ற துறையிலும் இதே போன்று பல சாதனைகளை செய்தார்.

இன்று தமிழகத்தில் அமைதியான நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி மக்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தருகின்ற பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு முறைப்படி செயல்படுத்தி வருகிறது. இதில் தமிழக அரசு முதன்மையாக விளங்குகிறது. விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து என ஒவ்வொரு பொதுமக்களுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

ஆனால் எந்த திட்டமும் செயல்படுத்தாமல் 2006 முதல் 2011மீண்டும் மின்சார தட்டுபாடு ஏற்படுத்த ஆட்சிக்கு வர நினைக்கிறார்களா என தெரியவில்லை,
குறிப்பாக இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி இந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக இந்த தொகுதியில் எத்தனை நாள் இருந்தார், என்ன பணிகள் செய்தார் என்பது இப்பகுதி மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்,

இங்கு ஓர் விருந்தாளியாக வந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி கொண்டு இப்போது மீண்டும் அந்த இயக்கத்தின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் பல கோடி ரூபாய் நலத்திட்டங்களை அம்மா அரசு வழங்கி உள்ளது. இந்த சட்டமன்றத்தில் அண்ணா திமுக உறுப்பினர்கள் மட்டுமே செயல்படுகிறார்கள், திமுகவின் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினராக ஒருநாளும் செயல்பட்டது கிடையாது. இது பொது மக்களுக்கு தெரியும்.

24 மணி நேரமும் மக்களுக்காக உழைப்பவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். தூங்கும் போது தட்டி எழுப்பி தங்கள் குறையை கூறினாலும் உடனே விரைந்து உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.

இந்த தொகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது எம்பி நிதியிலிருந்து பல நலத்திட்டங்களை இந்த திரும்ப தொகுதிக்கு செய்துள்ளேன் உதாரணமாக 22 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
என்னை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் 24 மணி நேரமும் உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன் என்பதை உறுதி கூறுகிறேன். எனவே பிஜேபி ,பாமக, தாமாகா கூட்டணியில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்

என ப.குமார் பேசினார்.

அவருடன் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினர் பாஜக,பாமக, தமாகா நிர்வாகிகள் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

அதிமுகவை சேர்ந்த தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாந்தி, ஒன்றிய செயலாளர்கள் கும்பகுடி கோவிந்தராஜன், ராவணன், கௌரி செயலாளர்கள் பாஸ்கரன், பாலசுப்ரமணியன், தண்டபாணி முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீ நிதி, அணி செயலாளர்கள் ராஜா மணிகண்டன் , தகவல் தொழில்நுட்பப் பிரிவு சுரேஷ்குமார், அமைப்புசாரா பாஸ்கர், TT கிருஷ்ணன், கலைப்பிரிவு ராஜா. எஸ்.பி.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.