சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள், போலீசார் உட்பட 200 பேர் பொன்மலையில் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் சட்டமன்றத் தேர்தலில் அச்சமின்றி வாக்கு அளிக்கும் விதமாக மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர்.
அப்படி வரும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பொன்மலை பகுதிக்கு வந்த மத்திய பாதுகாப்பு படை பிரிவு வீரர்கள் பொன்மலை உட்கோட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட போலீசார் மற்றும் திருச்சி அதிவிரைவு படை போலீசார் என சுமார் 200போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியை பொன்மலை போலீல் உதவி ஆணையர் தமிழ்மாறன் தலைமையில், பொன்மலை மலையடிவாரம் சாய் பாபா கோவிலில் இருந்து தொடங்கி பொன்மலைப்பட்டி கடை வீதியாக வந்து ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் பொன்மலை சரக காவல் ஆய்வாளர் உதயசந்திரன், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.