Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம். 40 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது.

Ad banner

புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000,

கடும் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும்.

TVK ad

தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத பணியிடங்களை தமிழ்நாடு அரசு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்”

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக இன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு
சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கோபிநாத், மாநில துணைச் செயலாளர் புஷ்பநாதன், நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், குமார், தனலட்சுமி, அந்தோணி சேகர், சரவணன், ஸ்டெல்லா, செல்வம் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.