100 நாள் வேலை திட்ட நிதியை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைப்பையும்,
விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட இடு பொருட்களின் மானிய குறைப்பை கண்டித்தும்,
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிக்குள் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்தியும்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கராஜ், சீனி வாசன், இளங்கோவன், பழனிவேல், செல்வமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.