திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் :
கொரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு 20.03.2020 முதல் யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க தற்காலிகமாக அனுமதிக்கவில்லை.
கொரானோ தெற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்பு இன்று முதல் ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி யாத்திரி நிவாஸ் செய்யட உள்ளது.
இதை முன்னிட்டு இன்று (10.02.2021) காலை கோயில் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி யாத்திரி நிவாஸில் சுதர்சன ஹோமமும் , தன்வந்திரி ஹோமமும் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அறங்காவலர்கள் கவிதா , டாக்டர்.சீனிவாசன் , யாத்திரி நிவாஸ் கண்காணிப்பாளர் புண்ணிய மூர்த்தி , மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .