பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை, தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கே கொண்டுபோய் சேர்க்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. டின்னில் அடைக்கப்பட்ட அரை கிலோ பஞ்சாமிர்தம், தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார லேமினேட்டட் புகைப்படம் ஒன்று மற்றும் கோயிலில் இயற்கையாக தயார் செய்யப்படும் விபூதி 10 கிராம் ஆகியவை பிரசாத பார்சலில் வரும். பிரசாத கட்டணம் 70, தபால் செலவு 180. மொத்தம் 250 ரூபாயை, தபால் துறையின் மூலம் இ-பேமண்ட் வழியாக செலுத்தினால் போதும். பிரசாதம் வீட்டுக்கே வந்துசேரும்.