திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பிரியதர்ஷன் (வயது 34) மருத்துவரான
இவர் திருச்சி புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தனது மாமியாரின் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக இன்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து திதி கொடுத்து விட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த மருத்துவர் கிஷோர் பிரியதர்ஷன் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.