Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமஜெயத்தின் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி கேர் கல்லூரியில்
ராமஜெயம் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மாலை அணிவித்து.

TVK ad

திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராமஜெயம் படத்துக்கும் அவரது திருவுருவ சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர மேயர் அன்பழகன், எம்எல்ஏ பழனியாண்டி
,மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா,பகுதி செயலாளர் கண்ணன், தொழில் அதிபர் ஜான்சன் குமார் ,புத்தூர் தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.