திருச்சியில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருச்சியில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்,நிலம் குடிமனை பட்டா கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும்,பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆர்பாட்டம் நடத்துவது குறித்து தொழிற்சங்கங்கள், இளைஞர், மாணவர் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் மாநில அளவில் மக்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுப்பது என்ற முடிவின் படி திருச்சியில் 25 – ந் தேதி மாலை பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி 5வது என்று தமிழ்நாடு மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இதற்கான ஆலோசனைக் கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் கே.சுரேஷ் ஏஐசி சிடிசி மாநில செயலாளர் தேசிகன் அருண் மற்றும் வழக்கறிஞர் சங்கம் ரெங்கராஜன் ஜனநாயக மாதர் சங்கம் மாலதி அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகம் மனோன்மணி மற்றும் இளைஞர் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

