ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளியில்ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆசிரியர் தினவிழா.
ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா.
ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டியின் நடுநிலைப்பள்ளி மற்றும் அரங்கநாயகி ஆரம்பப்பள்ளி, ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் ஆசிரியர் தின விழா.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பிரியா மகேஸ்வரி அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இவர் கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஏற்ற வகையில் தொழில் பயிற்சி அளித்து வருகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரங்கநாயகி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவவராஜிக்கு 2018 – 19 ம் ஆண்டில் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தனது இளைய மகளை தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்ற தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகள் பிரம்மா குமாரிகள் சகோதரிகள் அனுசியா மற்றும் மீரா கலந்துகொண்டு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள யோகாசனப் பயிற்சி அளித்தார்.
நிர்வாக செயலர் கஸ்தூரி ரங்கன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அருட் தந்தை டாக்டர். ஜான் ஆண்டனி சிறப்பாக பணிபுரிந்த 17 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கங்காரு நிறுவன அமைப்பாளர் ராஜா குமார் பொறுப்பாளர் தீபா ராஜா எஸ் கே வி பவுண்டேஷன் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரங்கநாயகி ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை சாந்தி நன்றியுரை ஆற்றினார்.











