Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 20 எம்பி தொகுதிகள் எவை? பட்டியல் முழு விபரம்

0

'- Advertisement -

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 132-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக உயரவுள்ளது.

Ad banner

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒரு மாநிலத்திற்குள் உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக உருவாக வாய்ப்புள்ள 20 மக்களவைத் தொகுதிகள் எவை என்பது குறித்த உத்தேசப் பட்டியல் அரசியல் வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசால் நியமிக்கப்படும் தொகுதி மறுவரையறை ஆணையமே இறுதி எல்லைகளைத் தீர்மானிக்கும். தற்போதைய மக்கள்தொகை அடர்த்தி மற்றும் புவியியல் அமைப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ள உத்தேசப் பட்டியல் இது

மண்டல வாரியாகப் புதிதாகக் கிடைக்க வாய்ப்புள்ள 20 தொகுதிகள் விபரம்:

1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC மண்டலம் – 5 தொகுதிகள்)

மக்கள்தொகை அதிகம் உள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 5 புதிய தொகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது:

1. மேற்கு சென்னை

2. திருவொற்றியூர் அல்லது கிழக்கு சென்னை

3. ஆவடி

4. தாம்பரம்

5. செங்கல்பட்டு

2. வடக்கு மற்றும் வடமேற்கு மண்டலம் (திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி – 4 தொகுதிகள்

6. ஓசூர்

7. ராணிப்பேட்டை

8. வந்தவாசி

9. திண்டிவனம்

3. கொங்கு / மேற்கு மண்டலம் (சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் – 5 தொகுதிகள்)

தொழில் நகரங்கள் நிறைந்த மேற்கு மண்டலத்தில் 5 புதிய எம்பி தொகுதிகள் அமைய வாய்ப்புள்ளது:

10. ஆத்தூர்

11. ராசிபுரம் அல்லது திருச்செங்கோடு

12. கோபிச்செட்டிபாளையம்

13. வடக்கு கோவை அல்லது மேட்டுப்பாளையம்

14. பல்லடம்

4. மத்திய மற்றும் தென் மண்டலம் (திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி – 6 தொகுதிகள்

15. பழனி

16. முசிறி

17. பட்டுக்கோட்டை அல்லது மன்னார்குடி

18. மேலூர்

19. திருச்செந்தூர்

20. கோவில்பட்டி

நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறியதும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்டு, புதிய தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். அதோடு, இந்த 59 தொகுதிகளில் சுமார் 20 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளதால், 2029 பொதுத் தேர்தலில் தமிழக அரசியல் களம் முற்றிலும் புதிய வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது …

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.