Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மன்சில் கார்ட் பர்னிச்சர் கடை நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி ரூ 25 கோடி மோசடி, கமிஷனரிடம் புகார்

0

'- Advertisement -

திருச்சி மன்சில் கார்ட் பர்னிச்சர் கடை நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி ரூ 25 கோடி மோசடி

Ad banner

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ..

பர்னிச்சர் கடை நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி

திருச்சியில் ரூ 25 கோடி மோசடிசெய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி அந்த கடையின் உரிமையாளர் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை நம்ப வைத்துள்ளார்.

இதை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர் கூறியபடி லாபத்தையும் தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் அவர்களை ஏமாற்றி உள்ளார். கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பணம் வாங்கிய உரிமையாளர்கள் ஜூலை மாதத்திற்குள் கடையை பூட்டிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாகியுள்ள பர்னிச்சர் கடையின் உரிமையாளர் தற்போது கேரளாவில் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது மோசடி தொடர்பாக ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், திருச்சியை சேர்ந்த இளஞ்செழியன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் தங்களுக்கு வர வேண்டிய ரூ. 61 லட்சம் உட்பட ஒட்டுமொத்த தொகையையும் மீட்டுத் தருமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுவரை சுமார் 100 பேரை ஏமாற்றி ஏறக்குறைய ரூ. 25 கோடி வரை இந்த மோசடி நடந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள உரிமையாளரைக் கண்டுபிடித்துத் தங்களின் வாழ்வாதாரப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.