Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவலரே சொந்த சொத்து பிரச்சனை காரணத்திற்காக கூலிப்படையை வைத்து கொலை வெறி தாக்கல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு (வீடியோ உடன்)

0

'- Advertisement -

பேராவூரணி தாலுக்கா, ஆவணம் பஞ்சாயத்து துலுக்கவிடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்த வீ. காமராஜ், (வயது 52 ) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது , அதே ஊரை சேர்ந்த வீரப்பன் மகன் குழந்தைவேல் (வயது 40), சுப்பிரமணியன் மகன் பாதாகுமார் (வயது 35), இரண்டு பேரும் சொத்து பிரச்னை காரணமாக

Ad banner

அன்று இரவு 7:30 மணி அளவில் காமராஜ் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொண்டு

10, 15 அடியாட்கள் உடன் வீட்டிற்கு வந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

 

அதனையடுத்து திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அறிவுறுத்தல்படி அன்று இரவே காமராஜ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சு பாதக்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம்.மழையூர் – காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை – காவலர் சட்டம் ஒழுங்கு பிரிவுவில் பணிபுரிந்து வருகிறார்.

ஒரு காவலரே சொந்த சொத்து பிரச்சனை காரணத்திற்காக கூலிப்படையை வைத்து கொலைவெறி தாக்கல் நடத்திய இந்த சம்பம் அப்பகுதி பொது மக்களுக்கிடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முதல் நபர், குழந்தைவேலு என்பவர் தலைமறைவாக வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது …..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.