Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தி.மு.க ஒரு தீய சக்தி; அப்பாவைக் காணோம்: அரசுப் பேருந்து எல்.இ.டி திரையில் சர்ச்சை வாசகம்: இது அரசு பஸ்ஸா.. இல்லை தவெக கட்சி பஸ்ஸா.?பொதுமக்கள் கேள்வி

0

'- Advertisement -

புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரையில், வழக்கமான வழித்தடப் பெயர்களுக்குப் பதிலாகத் எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் அதன் தலைவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Ad banner

வழக்கமாக அரசுப் பேருந்துகளின் பின்புறம் பயணிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் வசதிக்காகப் பேருந்து செல்லும் ஊர் பெயர்கள் மற்றும் வழித்தடங்கள் டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்படும். ஆனால், இந்த குறிப்பிட்ட பேருந்தில் ‘ஓம் சக்தி பராசக்தி தி.மு.க ஒரு தீய சக்தி; கொளத்தூர் கொத்து பரோட்டா அங்கிள், எங்க உங்க அப்பாவைக் காணும்’ என்பது உள்ளிட்ட கடுமையான அரசியல் ரீதியான விமர்சன வாசகங்கள் ஒளிபரப்பாகின. குறிப்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரடியாக குறி வைத்து விமர்சிக்கும் வகையில் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

சாலையில் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தின் பின்புற திரையில் தி.மு.க-வுக்கு எதிரான இந்த வாசகங்கள் ஒளிபரப்பானதைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் சிலர் தங்களது செல்போனில் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ முகநூல் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.

 

அரசுப் பேருந்தில் நேரடியாக எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் அதன் உயர்மட்டத் தலைவர்களை குறி வைத்து இத்தகைய சர்ச்சைக்கும் கேலிக்கும் உரிய கருத்துக்கள் இடம்பெற்றது போக்குவரத்துக் கழக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா அல்லது யாரேனும் வேண்டுமென்றே ஹேக் செய்து அல்லது திட்டமிட்டு இந்த வாசகங்களைச் சேர்த்தனரா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் திரையைத் தவறாகப் பயன்படுத்தி தி.மு.க தலைவர்களுக்கு எதிரான அரசியல் விமர்சனங்களை ஒளிபரப்பிய நபர் யார் என்பது குறித்தும், இதற்குப் பொறுப்பான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி மற்றும் திருச்சி வழித்தடத்தில் பயணம் செய்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.