Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பஞ்சப்பூரில் நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய இறுதி கட்டப் பணியை மேயர் மு.அன்பழகன் ஆய்வு

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பஞ்சப்பூரில் (100 MLD SBR Technology ) நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூபாய்.233.87 கோடி மதிப்பீட்டில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பொறியாளர்களுடன் நேரில் இன்று செவ்வாய்க்கிழமை (13.10.2026) ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு எண்.62க்குட்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில், 247.50 ஏக்கரில். தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (NRCP) 58.64 MLD கொள்ளளவில் Waste Stabilization Pond முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.

பஞ்சப்பூரில் (100 MLD SBR Technology) நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 233.87 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை மேயர் மு.அன்பழகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பயன் பெறும் வகையில் இதன் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இப்பணிகள் 88.40 சதவீதப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு இறுதியில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் வார்டு எண்.1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,42,43,44,48, 49,50, 51,52,53, 54,59 ஆக மொத்தம் 50 வார்டு மக்கள் பயன் பெறுவாகள் என தெரிவித்தார்

முன்னதாக பஞ்சப்பூரில் உள்ள 58 எம் எல் டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாற்றி அமைக்க புதிய கழிவு நீர் உந்து நிலையம் கட்டுமானபணியினை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்

இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் அண்ணாதுரை. உதவி செயற்பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.