வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில்
பிரதான வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை திருச்சி மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார் ..
திருச்சிராப்ள்ளி மாநகராட்சி சார்பில், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகரின் 5 மண்டலங்களிலும் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால் களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது .
அதனை திருச்சி மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி அவர்கள் மண்டலம் 3 ,வார்டு எண் 44, தங்கேஸ்வரி நகர் முதல் கணேசபுரம் வரை 1270 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பொறியாளர்களுடன் இன்று திங்கள் கிழமை (05.10.2026) நேரில் ஆய்வு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநகரம் முழுவதும் வெள்ள பாதிப்புகளை தடுக்க மற்றும் சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்ய ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. இதன் மூலம் 215.74 கி.மீ நீளத்திற்கு நாட்டு வாய்க்கால், சம்பா வாய்க்கால், கோட்டை வாய்க்கால், வெனிஸ் தெரு, வடக்கு ஆண் டார் தெரு, பட்டர்வொர்த் சாலை, மதுரா கார்டன் வாய்க்கால், எஸ்.எஸ்.நகர் வாய்க் கால், ராஜீவ்காந்தி நகர் வாய்க்கால், லயன் டேட்ஸ் வாய்க்கால், பூசாரித்தெரு வாய்க் கால், ரெட்டை வாய்க்கால், வசந்த நகர் உய்யக்கொண்டான் வாய்க்கால், கத்தரி வாய்க்கால், காத்தான் வாய்க்கால், செல்வா நகர் வாய்க்கால், விருப்பாட்சிபுரம் வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்களும், நகரின் உட்பகுதிகளிலுள்ள பிற மழைநீர் வடிகால்களும் தூர்வாரும் பணியை துவங்கி நடைபெற்று வருகிறது .
இதில் 136.80 கி.மீ. நீளம் மனித ஆற்றல்கள் மூலமும், 78.94 கி.மீ நீளம் இயந்திரங்கள் மூலமும் விரைவில் தூர்வாரப்படவுள்ளது. மேலும், அகலமான மற்றும் பெரிய வடிகால்
வாய்க்கால்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்ற நவீன தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் எக்ஸ்கவேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயந்திரங்கள் செல்ல முடியாத குடியிருப்பு பகுதிகள் மற்றும் குறுகிய உட்புற சாலைகளிலுள்ள சிறிய மழை நீர்வடிகால்கள் மனித ஆற்றல் மூலம் தூர்வாரப்படடு வருகிறது. கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மழைநீர் தேங்கு வதை தடுப்பதுடன், பருவ மழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள திருச்சி மாநகராட்சி உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, டீசலில் இயங்கும் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தாழ்வான குதிகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. 5 மண்டலங்களிலும் தலா இரண்டு மோட்டார் பம்புகள் ஒதுக்கப் பட்டுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுவதை தடுக்க, ஆபத்தான மரக் கிளைகளை வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையிலுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வடிகால் பணிக ளையும் முழுமையாக முடித்து, தடையற்ற நீர் ஓட்டத்தை உறுதி செய்ய ஆணையர் பொன்மணி மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

