Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சைபர் கிரைம் குற்றம் தொடர்பான தரவுகள் சேகரிக்கும் மையத்தை திருச்சியில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார்

0

'- Advertisement -

திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில்

Ad banner

சைபர் கிரைம் குற்றம் தொடர்பான தரவுகள் சேகரிக்கும் மையத்தை திருச்சியில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார்.

பின்னர் போலீஸ் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்

தமிழக போலீஸ் டிஜிபிமகேஷ் குமார் அகர்வால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வருகை புரிந்தார்.

பிறகு அவர் திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக

திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி, தஞ்சை சரக டிஐஜிகள், மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்தும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் கண்காணிப்பது குறித்து டிஜிபி போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பான தரவுகள் மையத்தை டி.ஜி.பி திறந்து வைத்தால் தொடர்ந்து காணொளி காட்சி மூலம் 9 மாவட்டங்களிலும் அந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நவீன தரவு மையம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் நடக்கும் இணையவழி குற்றங்களை உடனுக்குடன் கண்காணித்து, தரவுகளை பகுப்பாய்வு செய்ய உதவும்.

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட

9 மாவட்டங்களில் பதிவாகும் பல்வேறு விதமான சைபர் குற்றங்களின் முறைகளை ஆராய்ந்து, குற்றவாளிகளின் இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்டறிய தொழில்நுட்பக் கருவிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அந்த மையம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.