Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது .

0

'- Advertisement -

திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது .

Ad banner

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நாக்-அவுட் முறையில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

மாணவர்கள் பிரிவில் 5 கல்லூரிகளும் மாணவியர்கள் பிரிவில்11 கல்லூரி அணிகளும் பங்கு பெற்ற டேபிள் டென்னிஸ்

இறுதி போட்டியில் மாணவர்கள் பிரிவில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, நாகை, இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றும், மாணவியர்கள் பிரிவில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியை 3-2

என்ற செட் கணக்கில் வென்றும் முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக மெயின் வளாகத்தை 3-0 என்ற செட் கணக்கில் வென்றும், மாணவியர்கள் பிரிவில்

சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி, ஹோலி கிராஸ் கல்லூரியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாம் இடம் பிடித்தன.

 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி பொருளாளர் எம். ஜெ. ஜமால் முகமது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர், ஆர். ஜாகிர் உசைன், விடுதி இயக்குனர் கே. என். முகமது பாசில், பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும் விளையாட்டு செயலாளர் பேராசிரியர் ஏ. பழனிச்சாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பி. எஸ். ஷா இன் ஷா, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் சி. மாலதி, பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜி. பிருந்தா ஆகியோர் முன்னிலையில் வழங்கினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.