Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

55 கிளைகள். பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ். திருச்சியில் ஒரே நாளில் 3 புதிய கிளைகள் திறப்பு .

0

'- Advertisement -

வாடிக்கையாளர்களின் பேராதரவில் பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சியில் ஒரே நாளில் மூன்று புதிய கிளைகளை திறப்பு ..

Ad banner

இது மறைந்த பி. கோவிந்தராஜூலு நாயுடு அவர்களால் திருச்சிராப்பள்ளியில் உள்ள பாலக்கரையில் முதன்முதலில் 1908 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்த இனிப்பகம், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது

பாரம்பரிய இனிப்பு வகைகளிலிருந்து இன்றைய காலகட்டத்தில் புதிதாக ட்ரெண்டிங்கில் உள்ள ஸ்வீட்ஸ்கள் வரை கிடைக்கும் சிறந்த இடம்

பி.ஜி நாயுடு என்கிற பெயரையும் நன்மதிப்பையும் பிஜி நாயுடு தொடர்ந்து பெற்று வருகிறது.

அந்த வகையில் வாடிக்கையாளர்களின் ஏக மனதனான ஆதரவோடு பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் இன்று ஓரே நாளில் மூன்று புதிய கிளைகளை திருச்சி மாநகரில் திறந்துள்ளது.

திருச்சி தினத்தந்தி அலுவலகம் எதிரில் 53 வது கிளையையும்,

குண்டூர் மொரைய்ஸ் சிட்டி நுழைவில் 54வது ஷோரூமையும், சத்திரம் பேருந்து நிலையம் மெஜஸ்டிக் மகாராஜா முன்பாக தனது 55 ஆவது கிளையும் இன்று பிஜி நாயுடு குழுமம் தொடங்கியுள்ளது.

53வது கிளையை திருச்சி ரயில்வே மண்டல வர்த்தக பிரிவு மேலாளர் வெங்கட்ராகவன் கலந்து கொண்டு புதிய

பி.ஜி நாயுடு கிளையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேலாளர் பிள்ளைகனி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றினர்.

 

திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பி.ஜி . நாயுடு மேலாண்மை இயக்குனர்கள் பாலாஜி,நிர்வாக இயக்குனர் அமர்நாத்,நிர்வாக இயக்குனர்கள் சார்நாத்,வினோத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் பெரம்பலூர் காரைக்குடி பட்டுக்கோட்டை மதுரை ஆகிய மாவட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் ஸ்வீட் மற்றும் காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி வருகிறது –

தரமான நியாயமான விலையில்

இங்கு 650 வகையான ஸ்வீட்டுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.