ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை சார்பில் புள்ளம்பாடியில் தினசரி அன்னதானம்
நினைவு நாள் அன்னதானத்தில் உயிரினமும் உணவு எடுத்துச் சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வ
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடியில் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை மற்றும் புள்ளம்பாடி ஒன்றிய பொதுமக்கள் இணைந்து, கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதியோர் தினத்தை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கினர்.
இந்த அன்னதானத்தின் முக்கிய நோக்கம், 1956-ஆம் ஆண்டு புள்ளம்பாடி வாய்க்காலை அமைத்து, காவிரித்தாயை புள்ளம்பாடிக்கு கொண்டு வந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு நன்றியுணர்வு செலுத்துவதாகும்.
தினமும் அன்னதானம் வழங்குவதற்கு முன்பாக, கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவாக மலர் தூவி மரியாதை செலுத்துவதுடன், பல்லுயிர்களின் பசியையும் போக்கும் வகையில் ஒரு கைப்பிடி சாதம் வைக்கப்பட்ட பின்னர், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கோபிநாதன் புள்ளம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ரங்கராஜ் காமராஜர் மன்றத் தலைவர் புள்ளம்பாடி, தொழிலதிபர் சிறுகளப்பூர் முத்தமிழ்செல்வன், சிவசாமி எஸ்.சி. பிரிவு திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்கள் தினந்தோறும் ஒருவர் தலைமையேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்து வருகின்றனர்.
நினைவு நாள் அன்னதானத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு
இந்த நிலையில், செப்டம்பர் 2-ஆம் தேதி, அன்று புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாதன் அவர்களின் தாயார் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தபோதே, ஒரு சிறிய உயிரினம் வந்து அன்னத்தை எடுத்துச் சென்ற காட்சி அங்கு இருந்தவர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தினசரி அன்னதானம் நடைபெற்று வந்தாலும், முதல் முறையாக நினைவு நாள் அன்னதானம் வழங்கப்பட்ட நாளிலேயே, பல்லுயிர்களில் ஓர் உயிரினம் நேரடியாக வந்து அன்னத்தை எடுத்துச் சென்றது.
இந்த நாளின் தனிச்சிறப்பாக அமைந்தது.“அன்னதானம் என்பது மனிதர்களின் பசியை மட்டும் போக்குவதல்ல; பல்லுயிர்களையும் நேசித்து, அவற்றின் பசியையும் போக்கும் ஒரு உயர்ந்த சேவை” என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாக அங்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.
தினசரி குறைந்தது 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கும் இத்திட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்களது பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் அன்னதானத்திற்கு உபயம் செய்து பங்கேற்கலாம்.
என ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்னதானம் • மனிதநேயம் • நன்றியுணர்வு • பல்லுயிர் நேயம்
தொடர்புக்கு:
நற்பவி. முத்துசூர்யா
செல்: 9080145071

