Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான காதல் மனைவி இருக்க 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

0

'- Advertisement -

திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட  7 பேர் மீது வழக்கு

Ad banner

கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.  இவர் சூர்யாவின் மாமன் மகள் ஆவார்.  பின்னர் திருமண ஆசை காட்டி அவரை திண்டுக்கல் வடமதுரையில் உள்ள  தனது உறவினர் வீட்டில் வைத்து பாலியல் உறவு மேற்கொண்டார். இதில் அந்த இளம் பெண் கர்ப்பம்மடைந்தார். பின்னர் இரு குடும்பங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் உள்ள ஓர் வீட்டில் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். அதன் பின்னர் சூர்யாவுக்கு தனது சகோதரியின் தோழி வினிதா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது .அதைத் தொடர்ந்து அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் வசித்து வந்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்  தனது மாமனார் கந்தசாமி மற்றும் உறவினர்கள் குமார், முத்துலட்சுமி, அனிதா, ஸ்ரீ கமலதாரணி ஆகியோரிடம் நியாயம் கேட்டார். ஆனால் அவர்கள் யாரும் அவரது நியாயத்தை கேட்காமல் அந்த இளம் பெண்ணை பெற்றோர் வீட்டுக்கு திருப்பி அனுப்பினர் . இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் கணவர் சூர்யா அவரது இரண்டாவது மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தற்போது இந்த வழக்கு வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.