Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை பொதுக் கூட்டத்தில் காலி சேர்கள் மத்தியில் மூச்சுமுட்ட பேசிய அமைச்சர் ரமேஷ்

0

'- Advertisement -

தவெக 100 நாள் சாதனை பொதுக் கூட்டத்தில் பாதியில் வெளியேறிய மக்கள்… காலி சேர்கள் மத்தியில் மூச்சுமுட்ட பேசிய அமைச்சர் ரமேஷ்

Ad banner

திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அரசின் சாதனைகளை எடுத்துரைக்காமல் வழக்கம்போல் எதிர்க்கட்சியான திமுகவை விமர்சித்து அமைச்சர் உரையாற்றியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து பாதியிலேயே கலைந்து சென்றனர். இதனால் பொதுக்கூட்டம் வெறிச்சோடி இருக்கைகள் காலியாக காணப்பட்டது.

மாவட்ட பொறுப்பாளர் ஸ்பா புகழ் செந்தில் ஏற்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், துறையின் சாதனைகள் மற்றும் அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அமைச்சர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் வழக்கம்போல திமுகவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் அரசியல் மோதல்கள் குறித்தே கூட்டத்தில் விரிவாகப் பேசிய அவர் அரசின் சாதனைகளை இறுதிவரை பட்டியலிட்டுக் கூறவில்லை.

அரசியல் விமர்சனங்களையே தொடர்ந்து முன்வைத்ததால், கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் வெறுப்படைந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற கொண்டு இருக்கும்போதே வெளியேறத் தொடங்கினர். நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே பெரும்பான்மையான நாற்காலிகள் காலியாகின. அப்படி இருந்தும் விடாமல் தொடர்ந்து காலியான இருக்கைகளுக்கு நடுவே அமைச்சர் மூச்சு முட்ட பேசிக்கொண்டிருந்தார் என கூறப்படுகிறது ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.