Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சியில் நேற்று சுதந்திர தினத்தன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது அரசால்  அறிவிக்கப்பட்டு இருந்தது ..அதையும் மீறி மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது ..

Ad banner

திருச்சி பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மதுபானம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை செய்தபோது அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த திருவெறும்பூர் அண்ணா நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று திருச்சி அரியமங்கலம் பகுதியில் அம்பிகாபுரம் தேசிய மயமாக்கப்பட்ட ஏடிஎம் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த திருவெறும்பூர் அண்ணா நகரை சேர்ந்த ரூபன் ராஜ் (வயது 25) என்பவரை அரியமங்கலம் காவல் நிலையம் போலீசார் கைது செய்துள்ளனர் மேற்கண்ட இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரபாகரன், ரூபன் ராஜ் ஒருவரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.