
பொள்ளாச்சியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு பஸ் ஒன்று சென்றது. அப்போது, அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார்.கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார். அப்போது, அதே பஸ்சில் பயணித்த போலீஸ்காரர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த போத்தனூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்த போலீஸ்காரர் மணிவேந்தன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து பாலியல் வழக்கில் சிக்கிய போலீஸ்காரர் மணிவேந்தனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் கண்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

