தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கினர் .

தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர் .
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச ஊதிய உயர்வு,விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 10ஆம் தேதி தொழிலாளர்கள்,விவசாயிகள் பங்கேற்கும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடக்கிறது.இந்த மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தொடங்கியது.பின்னர் சுப்பிரமணியபுரம் பகுதி முழுவதும் தஞ்சை சர்வீஸ் சாலை வரை பிரச்சாரம் நடைபெற்றது பிரச்சார இயக்கத்திற்கு விரைவு போக்குவரத்து சங்கத்தின் மாநில தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார் பிரச்சாரத்தின் நோக்கங்களை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன் விளக்கிப் பேசினார்
இந்த புத்தகத்தில் மாவட்ட துணைத் தலைவர் டி. சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் அருண் ,மகேந்திரன் சந்திரசேகர் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்

