இந்து எழுச்சி பேரவை சார்பாக சூலாயுத வழிபாடு யாத்திரை போராட்டம், திருச்சியில் இந்து எழுச்சி பேரவை மாநிலத் தலைவர் அறிவிப்பு.
இந்து எழுச்சி பேரவை சார்பாக சூலாயுத வழிபாடு யாத்திரை போராட்டம், திருச்சியில் இந்து எழுச்சி பேரவை மாநிலத் தலைவர் அறிவிப்பு.
இந்து எழுச்சிப் பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பழ. சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜி பி சதீஷ் கண்ணா, மாநில அமைப்பு தலைவர் பாரதிமோகன், திருச்சி மாவட்ட தலைவர் நிதீஷ் குமார் ,சோழ மண்டல நிர்வாகி ஆர். செந்தில்குமார், இளைஞரணி விக்னேஸ்வரன், தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.சி. ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில தலைவர் சந்தோஷ் குமார் கூறும்போது, திருச்சி இனாம் குளத்தூரில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆடி மாத வழிபாடாக
பால்குடம் ஊர்வலம் சென்ற மக்கள் மீது செருப்பு வீசியது தொடர்பாக ஒருவர் மீது பி.சி. ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அங்குள்ள சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சூலாயுதத்தை ஒரு தரப்பினர் கொடுத்த அழுத்தத்தினால் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்னறிவிப்பு இல்லாமல் தன்னிச்சையாக அப்புறப்படுத்தியுள்ளனர். இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமாகும் இந்த சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் இந்து எழுச்சி பேரவை சார்பாக சூலாயுத வழிபாடு யாத்திரை போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.
இந்த யாத்திரையானது திருச்சி உறையூர் ,சமயபுரம் உள்ளிட்ட 27 இடங்களில் இருந்து சூலாயுதத்துடன் புறப்பட்டு சென்று இனாம் காளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.
தஞ்சாவூர் புதுப்பட்டினம் பகுதியில் திருமலை எத்திராம்ஜி மடத்துக்கு சொந்தமான ரூ.160 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இது தொடர்பாக எங்கள் அமைப்பினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து தற்போது ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

