Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காமராஜர் பெயரில் காலை உணவு திட்டம். தொடக்கம் முதலமைச்சர் விஜய்க்கு தமிழக ஜனதா தள மாநில செயலாளர் அறிவழகன் பாராட்டு.

0

'- Advertisement -

எங்கள் கொள்கை தலைவர் பெருந்தலைவர் பெயரில் காலை உணவு திட்டம். தொடக்கம்

Ad banner

முதலமைச்சர் விஜய்க்கு தமிழக ஜனதா தளம்  மாநில செயலாளர் அறிவழகன் பாராட்டு.

இது குறித்து தமிழக ஜனதா தள மாநிலச் செயலாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :-

தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை எளிய குடும்பத்தில்  கல்வி விளக்கேற்றியவர் பெருந்தலைவர் காமராஜர். அவரை அடியொற்றி, அவரின் கொள்கைகளை தாங்கிப் பிடித்து, போற்றி, புகழ்ந்து   தமிழக ஜனதா தளம் பயணித்துக் கொண்டிருக்கிறது.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக ஜனதா தளம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை நல்கி பிரச்சாரமும் மேற்கொண்டது. அதற்கு பிரதிபலனாக தமிழக முதலமைச்சர் விஜய்  பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டி, 6ம் வகுப்பு முதல்  எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் காலை உணவினை வழங்க உத்தரவிட்டு அந்தத் திட்டத்தை சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

அவருக்கு, தமிழக ஜனதா தளம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி முக்கிய கோவில்களில் சமபந்தி விருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முன்பு இன்னும் வெளியிட்டுள்ளார். அதற்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

வாழ்க காமராஜர், வளர்க காமராஜர் புகழ்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.