Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார்

0

'- Advertisement -

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் . போலீசார் சோதனையில் வட மாநில நபர் கைது, கார், இருசக்கர வாகனம் பறிமுதல்

Ad banner

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக காவல்துறையினர் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி ஆய்வு மற்றும் சோதனை நடத்தி புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது பெரிய கேள்விக்குறியாகவும், சவாலாகவும் போலீசாருக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி ஏர்போர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராணி மாரியம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது அங்கிருந்த

இரண்டு வாலிபர்கள் போலீஸ் வருவது தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தியாகராஜன் ஆகிய இரண்டு பேர் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 313 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துபோலீசார் அங்கு சென்றுசோதனை மேற்கொண்ட பொழுது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரன் சிங் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.மேலும் இவருக்கு உதவிய பொன்மலை பட்டியை சேர்ந்த தமிழகன் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிறகு போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  மகேந்திரன் சிங்கை கைது செய்து அவரிடமிருந்து 251 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்து 97 ஆயிரம் ஆகும். இவர் பயன்படுத்தியகாரையும், போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.