Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா ஆலயத்தின் 146 வது பங்கு பெருவிழா. மாபெரும் அன்னதானத்தை அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா ஆலயத்தின் 146 வது பங்கு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நிகழ்ச்சி நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது .

தேர் பவனி திருவிழா தெருக்களில் உலா வந்து சர்ச் திரும்பி சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை முன்னாள் ஆவின் சேர்மனும் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

 

இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைப்புச் செயலாளருமான டி.ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணை செயலாளரும் திருச்சி மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சண்முகம் ,வழக்கறிஞர் ஜெயஸ்ரீ, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா, மாவட்ட பொருளாளர் மார்க்கெட் கே டி. தங்கராஜ், மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி,பகுதி செயலாளர்கள் டி.எஸ்.எம்.வசந்தம் செல்வமணி, வி.பி .எஸ். மகாதேவன் , சுரேஷ் குப்தா, இலியாஸ், கலீல் ரகுமான், உரந்தை முத்தையா, மோகன், எடத்தெரு பாபு, கமலஹாசன், முத்துக்குமார், செல்லப்பா, மாணவரணி மாநகர் மாவட்ட செயலாளர் பால மோகன் ராஜ், வாழைக்காய் மண்டி சுரேஷ், மலைக்கோட்டை சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.