Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம்.கொலை செய்து வீசி சென்றனரா?

0

'- Advertisement -

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பொக்லைன் சக்கரத்தில் சிக்கி 45 வயது மதிக்கத்தக்க நபர் பலியானார்.காயங்களுடன் பிணமாகக் கிடந்த நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ad banner

திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான அரியமங்கலம் குப்பைக் கிடங்கில், செயின் பொக்லைன் வாகனம் ஏறி இறங்கியதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

TVK ad

அச்சடலத்தை மீட்ட அரியமங்கலம் காவல் நிலையப் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார் என்றும்,போதையில் குப்பை கிடங்கு சென்றாரா?அல்லது யாராவது கொலை செய்து பிணத்தை வீசி சென்று விட்டனரா என்பது குறித்தும் எந்த செயின் பொக்லைன் வாகனம் ஏறி சென்றது என்றும் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.