Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாடு.தனியாருக்கு ஒப்படைப்பு. ஈஷாவுக்கு ரூ.2400 திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்

0

'- Advertisement -

ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியாருக்கு தாரை வார்த்ததை உடனடியாக கைவிட்டு மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

Ad banner

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் கோவி. வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

திருச்சி மாநகராட்சி, கடந்த 15.06.2026 முதல் ஓராண்டு காலத்திற்கு ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டில் பிரேதங்களை தகனம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகளை கோவையைச் சேர்ந்த “ஈஷா பவுண்டேஷன் காயநத்ஸ்தானம்” என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. இப்படி திருச்சி மாநகராட்சி ஏரிவாயு தகன மேடையை தனியார்மயம் கூடாது என்று 30.5.2025 அன்று நடந்த மாமன்ற கூட்டத்தில் இந்த CPM கவுன்சிலர் S.சுரேஷ் தீர்மானத்தை எதிர்த்து பேசி தீர்மானத்தை ரத்து செய்தோம். கடந்த கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நம்முடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் உணர்வுகளோடும், இறந்தவர்களுக்கு செலுத்தப்படும் இறுதி சடங்கு மரியாதையோடும் தொடர்புடைய இத்தகைய முக்கியமான பொதுச்சேவையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஒரு பிரேதத்தை தகனம் செய்வதற்காக ரூ.2,500 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ.100 மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தப்பட உள்ளதாகவும், மீதமுள்ள தொகையை தனியார் நிறுவனமே வைத்துக்கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிபடையாகவே தெரிய வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்ப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள் உணர்வுகளோடு சம்மந்தப்பட்ட பொதுச்சேவையை லாப நோக்கமிக்க வணிக நடவடிக்கையாக மாற்றும் அபாயத்தை உருவாக்குகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும்.

TVK ad

ஏற்கனவே கடந்த காலத்தில் கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடை பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய அஸ்திகள் முறையாக வழங்கப்படாததும், எரிவாயு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரேதங்களை ஒரே நேரத்தில் தகனம் செய்ததும் உடல்கள் எரிக்காமல் வெளியே செல்வதாகவும், எரியாத நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டு பொதுமக்களோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து போரடாடி பின்பு இது போன்ற மனிதநேயமற்ற செயல்பாடுகள் அப்போது வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக, தனியார் நிறுவனங்களிடமிருந்து அந்த பொறுப்புகள் மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தகன மேடைகளை பராமரித்து வந்தது. CTV காமேரக்கள் வைக்கப்பட்டது இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டு, சுடுகாட்டு சேவைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன.

இத்தகைய கசப்பான அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய சடங்கு மரியாதை மற்றும் கண்ணியம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

பொதுச்சேவை என்பது லாப நோக்கத்திற்காக நடத்தப்பட வேண்டிய துறை அல்ல. குறிப்பாக, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு மற்றும் சுடுகாடு போன்ற அத்தியாவசிய சேவைகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடி பொறுப்பிலேயே இருக்க வேண்டும். இந்த பொறுப்புகளை தனியாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

எனவே, ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தையும் மாநகராட்சி பகுதியில் உள்ள எந்த எரிவாயு தகன மேடையும் தனியார் மயம் படுத்துவதை உடனடியாக ரத்து செய்து, தகனம் மற்றும் பராமரிப்பு பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியத்தை உறுதி செய்து, மக்களுக்கு தரமான மற்றும் நம்பகமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வறிக்கை தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் தோழர் எஸ். ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா. லெனின் மற்றும் வி. சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.