Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திட்டமிட்டு ரூ.20 லட்சம் அரசு பொருட்களை அள்ளி சென்ற திருச்சி மாவட்ட திட்ட அலுவலர் கங்காதரணி, முதல்வரின் தாய்மாமன் சீர் வழங்கும் திட்டத்தில் இதை அள்ளி சென்றாரா?பாஜக திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகரன் கேள்வி

0

'- Advertisement -

தமிழகத்தில் உயர் அரசு அதிகாரிகளுக்கு, அவர்கள் தங்கும் அரசு இல்லங்கள் மற்றும் முகாம் அலுவலகங்களுக்கு (Camp Office) அரசாங்கத்தின் சார்பில் குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்து தரப்படுகின்றன.

 

Ad banner

சோபா செட், டைனிங் டேபிள், படுக்கை (Bed), அலமாரிகள் மற்றும் நாற்காலிகள்.குளிர்சாதனப் பெட்டி (Refrigerator), சலவை இயந்திரம் (Washing Machine), நுண்ணலை அடுப்பு (Microwave Oven).மின்சார நீர் சூடாக்கி (Water Heater) மற்றும் பிற அத்தியாவசிய சமையல் பொருட்கள், அலுவலகப் பயன்பாட்டிற்கான கணினி/மடிக்கணினிஇந்த உபகரணங்கள் மற்றும் வீட்டைப் பராமரிப்பதற்கான செலவுகள் அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

இந்த வசதிகள் அதிகாரிகளின் சொந்த பயன்பாட்டிற்கு அல்லாமல், அவர்களின் அதிகாரப்பூர்வ பணிகளுக்காகவும், பொதுமக்களைச் சந்திப்பதற்காகவும் வழங்கப்படும் வசதிகள் ஆகும்

அதிகாரிகள் தங்களின் அலுவல்முறை பொறுப்புகளைத் தாண்டி மேற்கூறிய வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கென விதிகளின்படி கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளும் உள்ளது.

 

ஒரு மாவட்டத்தில் பணிபுரிந்த அதிகாரி மற்ற மாவட்டத்திற்கு ட்ரான்ஸ்பரில் செல்லும் போது அவர்கள் தங்கும் இடத்தில் அங்கு இருந்த அதிகாரி அந்த பொருட்களை அப்படியே விட்டு செல்வார்,அதை மாற்றம் இருந்தால் புதிதாக சென்ற அதிகாரிகள் மாற்றி புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

 

ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத திருச்சி உறைய வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முன்னாள் திட்ட இயக்குனர் சௌ. கங்காதரணி தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இது குறித்து திருச்சி முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

இவர் திருச்சியிலிருந்து போகும்போது தனது பங்களாவில் இருந்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள அரசின் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின்,சோபா செட், கம்ப்யூட்டர் என அனைத்து பொருட்களையும் அள்ளி சென்றுள்ளார்.இவரது கணவர் தேனி மாவட்ட திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் ,கணவருடன் செல்வதால் முதல்வரின் தாய் மாமன் சீர் வழங்கும் திட்டத்தில் இதையும் அள்ளி சென்றாரா? பொதுமக்களின் வரிப்பணத்தில் தான் அதிகாரிகளுக்கு சம்பளம் மற்றும் இது போன்ற ஆடம்பரப் பொருட்கள் வழங்கப்படுகிறது இதனை எடுத்து செல்ல யார் அனுமதி அளித்தது? எனக் கேட்டுள்ளார் முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் .

 

மேலும் அவர் அள்ளி சென்ற பொருட்களின் லிஸ்ட் விவரம் :-

 

3 sofaset’s (value3 lacks),

5 unit’s of 2ton ac value3 lacks,

3 cots and beds value(LACKS),

Fridge,

Washing machine,

2 80 cm soni Bravia tv (value6 lacks),

2 laptops(value3 Lacks),

3 computer,

4 computer tables,

2 waterheater’s,

Microwave1,

Follower pot’s30 nos

Kitchen accessories all,

Total value 20 lacks

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.