Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 17 வது வார்டில் முதல்வரை பிறந்த நாளை முன்னிட்டு ராக்போர்ட் ராஜேஷ்-ன் அலுவலகத்தை குடமுருட்டி கரிகாலன் திறந்து வைத்து அன்னதானத்தை துவங்கி வைத்தார்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் தமிழக முதல்வரின் 52வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ் -ன் செயல் திட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.

TVK ad

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி  தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழக கட்சியினர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு நிகழ்வாக திருச்சி கிழக்கு தொகுதி 17வது வார்டில் மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ்-ன் செயல் திட்ட அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் திறந்து வைத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பழக்கடை .சரவணன், பகுதி செயலாளர் சந்திரசேகர், மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், , வேலாயுதம் மாரி, மோகன்தாஸ், குமார், மகளிர் அணி நிர்வாகிகள் கற்பகம், ஆறுமுகசெல்வி, சாலினி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.