திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் செயல்பட்டு வரும் லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் கடையின் பூட்டை நள்ளிரவில் உடைத்த மர்ம நபர்கள், உள்ளே புகுந்து ரூ .20,000 ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புமிக்க துணிமணிகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதே பகுதியில் இதன் அருகே செயல்பட்டு வரும் மற்றொரு கடையின் பூட்டையும் உடைத்து கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால், ஏதோ காரணத்தினால் அவர்களின் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர்கள் வந்து பார்த்த போதுதான் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்து உள்ளது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர்கள் உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர் அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்களைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள கடைகளின் சிசிடிவி கேமரா காட்சிகளை உறையூர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

