Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55).

Ad banner

இவர் 1995 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து தற்பொழுது சப் இன்ஸ்பெக்டராக துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி தற்போது மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற போது இந்திரா நகரில் இருந்து பூலாங்குடி நோக்கி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் துவாக்குடி எம்டி சாலையைச் சேர்ந்த துரை மகன் அன்பரசன் (வயது 22), ரவி மகன் மூர்த்தி (வயது 21) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெல் போலீசார் தட்சிணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேச பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்த இரண்டு பேரையும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.