திருச்சி முடுக்குப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம். 5 வருடமாக திமுக ஆட்சியில் இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தெரியாதா?
Protest demanding closure of TASMAC shop near Mudukkupatti, Trichy. Don't the Communist Party know that this TASMAC shop has been operating for 5 years under the DMK regime?
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் .
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கோயில்கள் அருகில் உள்ள
717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்தார். பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்படவில்லை என தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி குட் செட் மேம்பாலம் இறக்கத்தில் முடுக்குப்பட்டி அருகில் சாலையில் போக்குவரத்து மிகுந்த பகுதியான வழிபாட்டுத்தலங்கள் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பெண்களுக்கும்,
பொதுமக்களுக்கும்
இடையூறாக, அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் பெண்கள் உட்பட
நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் தாசில்தார் உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுவதற்கான உறுதிமொழி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், லெனின், சிஐடியு மாவட்ட துணை தலைவர் மணிமாறன், கிளைச் செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சித்ரா, புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கண்ட பொதுமக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கே இந்த கடை செயல்படவில்லையா? இப்பொழுது தான் இவர்களுக்கு இந்த டாஸ்மாக் கடை செயல்படுவது தெரிகிறதா? ஐந்து வருடங்களாக இந்த பகுதியில் எந்த விபத்தும் ஏற்பட வில்லையா? அப்போது எல்லாம் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்கு சென்றனர் என நகைத்தவாறு சென்றனர்:

