Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில் புகார்.

0

'- Advertisement -

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில் புகார்.

Ad banner

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார் என்பவர் கண்டோன்மென்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

 

எங்கள் அலுவலகத்தில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் எதுமலை இடைத்தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் செல்வகுமார் கண்டக்டராக பணிபுரிகிறார். இவர் கடந்த 28.09.2016 அன்று, கண்டக்டர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் கல்விச் சான்றிதழ்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கச் சென்ற போது, கடந்த ​​12.04.2018 அன்று பள்ளிகளுத்துறை இயக்குநரகம் தனது பதிலில், குற்றம் சாட்டப்பட்டவரின் 10 ஆம் வகுப்புச் சான்றிதழில் உள்ள மதிப்பெண்கள் மாற்றப்பட்டதாகவும், அவர் தனது 10 ஆம் வகுப்புச் சான்றிதழைப் போலியாகச் சமர்ப்பித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதை அடுத்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் கண்டக்டர் செல்வகுமார் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.