திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சியைச் சேர்ந்த ‘மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் அறக்கட்டளை’ சார்பில், செம்பட்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பள்ளி மாணவச் செல்வங்களுக்குப் புத்தகப்பை (School Bag), பென்சில் பாக்ஸ், மதிய உணவுப் பை (Lunch Bag) ஆகியவை அடங்கிய கல்வி உபகரணத் தொகுப்பினை வழங்கினார்.
மேலும், வரும் கல்வியாண்டில் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்துச் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் எனத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இக்கல்வி உதவி வழங்கும் விழாவில் மனிதம் அறக்கட்டளையின் நிறுவனர் தினேஷ், பகுதி செயலாளர் மணிவேல் மற்றும் திமுக நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

