Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சில்வர்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சாதனை

0

'- Advertisement -

திருச்சியில் சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் வெற்றியாளர்கள் தின விழா: 23 கிலோ கட்டி அகற்றப்பட்டு குணமடைந்தவர் நெகிழ்ச்சி.

Ad banner

திருச்சியில் உள்ள சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் 8-வது புற்றுநோய் வெற்றியாளர்கள் தின செய்தியாளர் சந்திப்பு திருச்சி ஐ.எம்.ஏ (IMA) அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

​இந்நிகழ்விற்குச் சில்வர்லைன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநரும், அறுவை புற்றுநோய் நிபுணருமான டாக்டர் ஜி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது,

“புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தைத் தாண்டி, வாழ்க்கையைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக இந்நாள் திகழ்கிறது. மேம்பட்ட நவீன சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயாளிகளின் உயிர் காக்கும் விகிதம் சிறப்பாக முன்னேறி வருகிறது” என்றார்.

​இந்த நிகழ்ச்சியில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சுரேஷ் என்பவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு பேசியதாவது:

​”எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு அப்பெண்டிக்ஸ் பகுதியில் உருவான அரிய வகை புற்றுநோயால், வயிற்றில் சுமார் 23 கிலோ எடையுள்ள பெரும் கட்டி கண்டறியப்பட்டது. சில்வர்லைன் மருத்துவமனையில் எனக்கு அதிநவீன ‘ஹைபெக்’ முலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நான் முழுமையாகக் குணமடைந்து, தற்போது டி.என்.இ.பி நிறுவனத்தில் சாதாரண வாழ்க்கையைத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். எனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என

நெகிழ்ச்சியோடு கூறினார்.

ஹீமாடோ புற்றுநோய் நிபுணர்

டாக்டர் கே. நரேந்திரன்,

நவீன மருந்து சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட உயிர்வாழ்வு வாய்ப்புகள் குறித்தும்,

​டாக்டர் எஸ். சிவபிரகாஷ் துல்லியமான மற்றும் குறைந்த தழும்புகளைக் கொண்ட அதிநவீன அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும்,கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் எம். ஜி. ராகுல்

நவீன கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்தும். குடல் மற்றும் செரிமான மண்டல நிபுணர் ​டாக்டர் எஸ். சங்கர் செரிமான மண்டல புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியத்தையும், பல்துறை கூட்டு சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

​இந்நிகழ்வில் பிரபல பேச்சாளர் பேராசிரியர் டாக்டர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு, புற்றுநோயை வென்றவர்கள் மென்மேலும் நம்பிக்கையுடன் வாழும் வகையில் பேசினார்.

​மேலும், தினமலர் நாளிதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் ஆர். ராமசுப்பு, ஐ.எம்.ஏ முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் எம்.எஸ். அஷ்ரப், தீபன் நர்சிங் ஹோம் முதன்மை மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன், சில்வர்லைன் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜி. ஹேமலதா, சில்வர்லைன் புற்றுநோய் மற்றும் சுகாதார அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் என். எம். கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

​தற்போதைய மருத்துவ உலகில் ஹைபெக், இலக்கு சிகிச்சை, துல்லிய அறுவை சிகிச்சை போன்றவற்றால் புற்றுநோய் குணமடைவோரின் விகிதமும், வாழ்க்கைத் தரமும் பெருமளவு உயர்ந்துள்ளதாக மருத்துவக் குழுவினர் கூட்டாகத் தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.