Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நமது உடலில் ஒரு செட்டு ரத்தம் போனால் ஆயிரம் சொட்டு ரத்தம் ஊறும்,ஒரு நிர்வாகி போனால் ஆயிரம் தொண்டர்கள் அதிமுகவில் இணைகிறார்கள் .உறையூர் பகுதி ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பேச்சு.

0

'- Advertisement -

திருச்சி அதிமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Ad banner

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான ரத்தினவேல் ஆலோசனை கூட்டத்திற்கு முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

தலைமை உரையாற்றிய மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தொண்டர்களிடையே ஆலோசனை வழங்கி பேசிய போது கூறியதாவது:-

அதிமுக கட்சி என்பது வளர்ந்து ஆலமரமாக இருக்கக்கூடிய கட்சி .ஒருவர் முதலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்தால் ஆயிரம் சொட்டு இரத்தம் ஊறும், மனிதனின் உடலில் ஆறு லிட்டர் ரத்தத்தில் ஒரு சொட்டு ரத்தம் வெளியில் போவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகள் விலகினால் ஆயிரம் தொண்டர்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள் .இந்த உறையூர் பகுதி செயலாளர் பதவிக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.எனவே கட்சியில் இருந்து விலகுபவர்கள் பற்றி நமக்கு கவலையே இல்லை,நமது பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீவிரக் கட்சிப் பணி ஆற்றுவோம்.நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட இடைத்தேர்தலில் தீவிர பணியாற்றி அனைத்து தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும்,பணம் பதவியை எதிர்பார்த்து நாம் கட்சியில் உள்ளவர்களுக்கு வேலை இல்லை .

இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா பேரவை மாநில இணை செயலாளரும், கவுன்சிலருமான அரவிந்தன், திருச்சி மாமன்ற அதிமுக தலைவரும் கவுன்சிலருமான ஆர்.அம்பிகாபதி,மாவட்ட துணை செயலாளர் வனிதா,வழக்கறிஞர் மலர்விழி, இலக்கிய அணி செயலாளர் பாலாஜி, டி.ஆர். சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா, கருமண்டபம் சுரேந்தர்,வெங்கட் பிரபு, வட்ட பொருளாளர் சந்திரசேகர் அங்குசாமி,கலீலுல் ரகுமான்,வட்ட செயலாளர்கள் எஸ்.எம்.டி.மணிகண்டன் , நத்தர்ஷா,தர்கா காஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

முடிவில் அனைவருக்கும் அசைவ உணவும் வழங்கப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.